ஆரணியில் அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமசந்திரன் வீட்டில் சுமார் 14 மணி நேரம் லஞ்ச ஓழிப்பு போலீசார் நடத்திய சோதனை நிறைவு பெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வருமானத்துக்கு அதிகமாக 8 கோடிக்கும் அதிகமாகச் சொத்து சேர்த்ததாகப் புகார் எழுந்தது.
இதனை அடுத்து, சேவூர் ராமச்சந்திரன், அவரது மனைவி, மகன்கள் மீது திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில், சேவூர் ராமச்சந்திரன் மற்றும் அவரது மகன் சந்தோஷ்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
சுமார் 14 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் ஆவணங்கள் சிக்கியதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சோதனைக்குப் பின் பேட்டியளித்த சேவூர் ராமச்சந்திரன், சோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்ததாகவும், ஏற்கனவே வாங்கிய சொத்தின் ஆவணங்களை மட்டுமே லஞ்ச ஒழிப்புத் துறை எடுத்துச் சென்றதாகவும் தெரிவித்தார். இதனை சட்டரீதியாக எதிர்கொள்வேன் என்றும் அவர் கூறினார்.