திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 7-ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறுவதை முன்னிட்டு, முகூர்த்த பந்தக்கால் நடப்பட்டது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகத் திகழும் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஜூலை 7-ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு, 300 கோடி ரூபாய் மதிப்பில் கோயிலில் பெருந்திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, ராஜகோபுரம் முன் பகுதியில் முகூர்த்த பந்தக்கால் நடப்பட்டது.
பின்னர், பூமி பூஜை செய்து, புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு, சுப்ரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு நடைபெற உள்ளதால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.