கார்கில் போர் வாஜ்பாய் பெயர் சொன்னதாகவும், ஆப்ரேஷன் சிந்தூர் பிரதமர் மோடி பெயரைச் சொல்வதாகவும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடைபெற்ற மூவர்ணக் கொடி பேரணியில் கலந்து கொண்டு பேசியவர்,
கார்கில் போர் வாஜ்பாய் பெயர் சொன்னது என்றும் இந்த போர் மோடி பெயரைச் சொல்கிறது என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
இந்திய ராணுவம் மூலம் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்குப் பிரதமர் மோடி காரியம் செய்தார் என்றும் தீவிரவாதிகள் பெண்களைப் பார்த்து மோடியிடம் கூறுங்கள் எனக் கூறினார்கள், இரு பெண் வீரர்களை வைத்து பிரமோஸ் ஏவுகணைகள் மூலம் 9 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது என அவர் கூறினார்.
இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணையை வாங்க மற்ற நாடுகள் முன்வந்துள்ளன என அவர் குறிப்பிட்டார்.