மாமன் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் அவினாசி சாலையில் உள்ள திரையரங்கில் நடிகர் சூரி, ரசிகர்களோடு சேர்ந்து மாமன் படத்தைப் பார்த்தார்.
பின்னர் பேட்டியளித்த அவர், மாமன் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், மதுரையில் மண் சோறு சாப்பிட்ட சம்பவம் போல் இனி நடக்காது என நினைப்பதாகவும், கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருவதாகவும் அவர் கூறினார்.