நெல்லையப்பர் கோயில் விநாயகர் தேருக்கு 8 லட்சம் ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்ட சக்கரங்கள் கோயில் வந்தடைந்தன.
நெல்லையப்பர் கோயில் ஆனி பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஜூலை 8-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கிடையே, விநாயகர் தேருக்கான சக்கரங்கள் பழுதடைந்ததால், புதிய சக்கரங்கள் வாங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இந்த நிலையில், விநாயகர் தேருக்கு சுமார் 4 டன் எடையுடன் கூடிய இரண்டு அச்சுகள் மற்றும் நான்கு சக்கரங்கள் 8 லட்சம் ரூபாய் மதிப்பில் கோவில் நிதியிலிருந்து வாங்கப்பட்டுள்ளன.