தமிழக- கேரள எல்லைப் பகுதியான புளியரை சோதனைச்சாவடியில் வனத்துறை அதிகாரி, கனரக வாகன ஓட்டுனரிடம் லஞ்சம் வாங்கிய வீடியோ வெளியாகியுள்ளது.
எஸ்.வளைவு பகுதியில் லஞ்சம் பெற்ற வன அதிகாரி, காவல் துறையினருக்கு லஞ்சம் கொடுப்பதுபோல தங்களுக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டும் என மிரட்டல் விடுத்துள்ளார்.
எனவே, சோதனைச்சாவடிகளில் லஞ்சம் பெறும் காவல்துறை மற்றும் வனத்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.