அருந்ததியர்களுக்கான 3 சதவீத உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வலியுறுத்தி திருச்சியில் புதிய தமிழகம் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அதன் தலைவர் கிருஷ்ணசாமி, இட ஒதுக்கீட்டை முறைப்படுத்த வேண்டும் என நீதிமன்றம் கூறிய நிலையில், திமுக அரசு அதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டினார்.