மதுராந்தகம் அருகே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளுக்குப் பணம் தராமல் அலைக்கழிக்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மின்னல்சித்தாமூர் ஊராட்சியில், நைனார் முகமது என்ற தரகர், விவசாயிகளிடம் இருந்து நெல் மூட்டைகளைக் கொள்முதல் செய்துள்ளார்.
சுமார் 45 நாட்கள் ஆகியும் கொள்முதல் செய்த நெல் மூட்டைகளுக்குப் பணம் தரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த விவசாயிகள் டிபிசியை முற்றுகையிட்டனர்.