சென்னையில் தாழ்தள மின்சார பேருந்துகள் அடுத்த மாதம் பயன்பாட்டிற்கு வரும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதிதாக வாங்கப்பட்டுள் மின்சார பேருந்துகள், பெரும்பாக்கம் மற்றும் பல்லவன் இல்லம் அருகே உள்ள பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இவற்றில் கூடுதல் இருக்கைகள், தொலைப்பேசிகளுக்கான சார்ஜர் வசதி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. பெரும்பாக்கம், பல்லவன் இல்லம், வியாசர்பாடி உள்ளிட்ட 5 பணிமனைகளில் மின்சாரப் பேருந்துகளுக்கான சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.