உதகை 127-வது மலர் கண்காட்சியை 3 நாட்களில் 43 ஆயிரத்து 626 சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்ததாகப் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகையில் 127-வது மலர் கண்காட்சி கடந்த 15-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
லட்சக்கணக்கான பூக்களைக் கொண்டு பல்வேறு வடிவங்களில் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ள கண்காட்சியைக் காணத் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
மேலும், பூத்துக் குலுங்கும் மலர்களுடன் சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். இந்த நிலையில், மலர் கண்காட்சி தொடங்கிய மூன்று நாட்களில் 43 ஆயிரத்து 626 சுற்றுலாப் பயணிகள் வந்ததாகப் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முதல் நாளில் 14 ஆயிரம் பேரும், இரண்டாவது நாளில் 16 ஆயிரத்து 580 பேரும், மூன்றாவது நாளில் 13 ஆயிரத்து 41 பேரும் கண்காட்சியைக் கண்டு ரசித்ததாகப் பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.