தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கிணற்றுக்குள் ஆம்னி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தஞ்சாவூரைச் சேர்ந்த 8 பேர், சாத்தான்குளம் அருகே உள்ள வெள்ளாளன் விளை பகுதியில் திருமண நிகழ்ச்சிக்காக ஆம்னி வேனில் சென்று கொண்டிருந்தனர்.
மீரான்குளம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோரம் இருந்த கிணற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஆம்னி வேனில் இருந்து 2 பேர் ஆம்னி வேனிலிருந்து வெளியேறிவிட்ட நிலையில், மற்ற 5 பேரும் கிணற்றுக்குள் சிக்கி கொண்டனர்.
தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின், 5 பேரையும் சடலமாகக் கண்டெடுத்தனர்.