ஹைதராபாத் அருகே அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 17-ஆக அதிகரித்துள்ளது.
தெலங்கானா மாநிலம் சார்மினார் அருகே உள்ள மூன்று அடுக்குகளைக் கொண்ட குடியிருப்பில் ஒரு பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தீ மளமளவெனக் கட்டடம் முழுவதும் பரவிய நிலையில், தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
பின்னர், படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 17-ஆக அதிகரித்துள்ளது.
மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.