டாஸ்மாக் நிர்வாகத்தில் நடந்த ஊழலில், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், தனியார் நிறுவனங்கள் கைகோர்த்து மிகப்பெரும் நிதியைச் சுருட்டியதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு டாஸ்மாக் நிர்வாகத்தில் நடந்த ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் தொடர்பாகத் தீவிர விசாரணையை அமலாக்கத்துறை மேற்கொண்டு வரும் நிலையில், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், தனியார் நிறுவனங்கள் கைகோர்த்து மிகப்பெரும் நிதியைச் சுருட்டியதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், ஒப்பந்த மதிப்பில் 10 முதல் 20 சதவீத தொகையை மது ஆலைகள் திமுகவுக்குக் கட்சி நிதியாக வழங்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சி நிதி எப்படி வழங்கப்பட்டது?, யார் மூலமாக வழங்கப்பட்டது?, அதனை நிர்வகிப்பது யார்? உள்ளிட்ட கோணங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கட்சி நிதியைக் கையாண்டதாகக் கூறப்படும் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் ரத்தீஸ் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு விசாரணை நடத்திய நிலையில், அரசியல் தொடர்புகள் பற்றிய தகவல்கள் அம்பலமானதால் திமுக முக்கிய புள்ளிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
மேலும், டாஸ்மாக் முறைகேடு மூலம் கிடைத்த கோடிகள் எங்கே முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பது பற்றியும் அமலாக்கத்துறை விரைவில் அம்பலப்படுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.