உக்ரைனில் பயணிகள் பேருந்தின் மீது ரஷ்யா நடத்திய டிரோன் தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த 4 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ரஷியா எல்லையிலிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுமியின் பிலோபிலியா நகர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பான படத்தை வெளியிட்டுள்ள உக்ரைன், பொதுமக்கள் வாகனம் மீது வேண்டுமென்றே ரஷியா தாக்குதல் நடத்தி மற்றொரு போர்க் குற்றத்தைப் புரிந்துள்ளதாகச் சாடியுள்ளது.