டாஸ்மாக்கில் நடந்த ஊழல் பணம் கட்சிக்கும், அவர்கள் எடுத்த சினிமா காட்சிக்கும் போய் இருப்பதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக சென்னை தியாகராய நகரில் அவர் அளித்த பேட்டியில்,
டாஸ்மாக் ஊழல் பணம் கட்சிக்கும், அவர்கள் எடுத்த சினிமா காட்சிக்கும் போய் உள்ளது என்றும் டாஸ்மாக்கில் பாஸ்மார்க் வாங்கிய திமுக, பெயில் மார்க் வாங்க போகிறது என தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.
மக்களின் வரிப்பணம் சுருட்டப்பட்டுள்ளது தெரிவித்தவர், 9 அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது என தமிழிசை சௌந்தரராஜன் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம் இருக்கும் என தமிழிசை சௌந்தரராஜன் திட்டவட்டமாக தெரிவித்தார்.