போர் நிறுத்தம் குறித்து புதின் மற்றும் ஜெலன்ஸ்கியுடன் பேச உள்ளதாக, அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர், வரும் திங்கட்கிழமை போர் நிறுத்தம் குறித்து முதலில் ரஷ்ய அதிபர் புதினுடன் பேச உள்ளதாகவும், பின்னர் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், போர் நிறுத்தம் ஏற்பட்டு வன்முறை முடிவுக்கு வரும் எனவும் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.