அமெரிக்காவின் கெண்டகி மாகாணத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 27 பேர் பலியாகினர்.
தொடர் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மின்தடையால் பல்லாயிரக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கின.
ஹெலிகாப்டர்கள் மற்றும் படகுகள் மூலம் மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டுப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தின் அளவு அதிகரித்து வருவதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.