திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வார விடுமுறையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.
திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் திருக்கோயில் சிவபெருமானின் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக வழிபடப்படுகிறது.
இந்த கோயிலுக்கு நாள்தோறும் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வது வாடிக்கை.
அந்த வகையில் வார விடுமுறை தினமான இன்று திரளான பக்தர்கள் கோயிலில் குவிந்து சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.
குறிப்பாக அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்ற பக்தர்கள் சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து வழிபாடு நடத்தினர்.