மெக்சிகோவைச் சேர்ந்த கடற்படை கப்பல், பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
மெக்சிகோ கடற்படைக்குச் சொந்தமான குவாக்டே மோக் என்ற கப்பல், 15 நாடுகளில் உள்ள 22 துறைமுகங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் அந்த கப்பல் அமெரிக்காவின் நியூயார்க்குக்குச் சென்றபோது, அங்குள்ள புரூக்ளின் பாலத்தைக் கடந்து செல்ல முயன்றது. அப்போது கப்பலின் கம்பங்கள், புரூக்ளின் பாலத்தில் மோதி இடிந்து விழுந்தது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 4 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பாலத்தின் மீது கப்பல் மோதும் வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகிறது.