மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பணப் பிரச்சனை காரணமாக முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டதில் சிறுவன் உட்பட இருவர் காயமடைந்தனர்.
கூடகோவில் பாறைகுளம் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான மாரிசாமி என்பவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். மாரிசாமிக்கும் அவரது உறவினர் மணிகண்டன் என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மாரிசாமி துப்பாக்கியால் சுட்டதில் சமாதானம் செய்யச் சென்ற கட்டிடத் தொழிலாளியான மணிகண்டனின் சகோதரர் உதயகுமாரின் வயிற்றில் குண்டு பாய்ந்துள்ளது.
மேலும் அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீதும் குண்டு பாய்ந்துள்ளது. தொடர்ந்து இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.