பின்லாந்தில் ஹெலிகாப்டர்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகினர்.
எஸ்தோனிய தலைநகர் தாலினில் இருந்து ஒன்றாகப் புறப்பட்ட இரண்டு ஹெலிகாப்டர்கள், பின்லாந்தின் யூரா விமான நிலையத்திற்கு அருகில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே ஹெலிகாப்டர்களில் இருந்த 5 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒரு ஹெலிகாப்டரில் இரண்டு பேரும், மற்றொன்றில் மூன்று பேரும் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த விபத்து தொடர்பாகத் தேசிய புலனாய்வுப் பிரிவு, உள்ளூர் காவல்துறையினருடன் கூட்டு விசாரணையை நடத்தி வருகிறது.