நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே விவசாய பகுதியில் சுற்றித்திரியும் கரடியால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள நெசவாளர் காலனி மலையடிவார பகுதியில் அக்னி சாஸ்தா கோவில் அமைந்துள்ளது.
நள்ளிரவில் இக்கோயில் வளாகத்தில் உலா வந்த கரடி, சுவாமிக்குப் படையலிடப்பட்டிருந்த பூஜை பொருட்களைச் சேதப்படுத்தியது.
இதுதொடர்பான காட்சி அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள நிலையில், அட்டகாசம் செய்துவரும் கரடியைப் பிடிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.