மக்கள் கொண்டாடும் ரியல் ஹீரோ ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி!
Sep 6, 2025, 01:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மக்கள் கொண்டாடும் ரியல் ஹீரோ ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி!

Web Desk by Web Desk
May 20, 2025, 06:13 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆப்ரேஷன் சிந்தூரில் விமானப் படையை வழிநடத்திய ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தியை, ரியல் ஹீரோவாக பலரும் கொண்டாடி வருகின்றனர். இதுபற்றிய ஒரு சிறப்புத் தொகுப்பை இனி பார்க்கலாம்.

இலக்குகளைத் தாக்குவது மட்டுமே எங்க வேல… சடலங்களை எண்ணுவதல்ல. அது அவர்களின் வேலை” என்கிற வார்த்தைகள் நாடுமுழுவதும் வைரலாகியுள்ளது. இந்த வார்த்தைகளுக்குச் சொந்தக்காரர் இந்திய ராணுவத்தின் விமானப்படை நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர், ஏர் மார்ஷல் அபேஷ்குமார் பார்தி…. சுருக்கமாக ஏ.கே.பார்தி, இன்றைக்குக் கொண்டாடப்படும் ரியல் ஹீரோ.

ஆம். பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்திய ராணுவத்தின் ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தது நமது விமானப்படை. எதிரிகளின் இலக்குகளை மட்டும் குறித்து வெற்றிகரமான தாக்குதலை நடத்தினர். இந்தியாவின் இந்த துல்லிய தாக்குதலை வியந்து பார்த்தது உலகம்.

இதைத் திட்டமிட்டு, செயல்படுத்திக் காட்டியவர் ஏ.கே.பார்தி. அந்த வெற்றிச் செய்தியைப் பகிர்ந்து கொண்ட ஊடக சந்திப்பில், ஒரு செய்தியாளரின் கேள்விக்கு, பாகிஸ்தானின் கிராணா மலையில் அணு ஆயுதங்கள் இருப்பது நீங்க சொல்லித்தான் தெரியும். நன்றி என்று அவர் கூறிய பதிலும், அதற்கு பிறகான அவரது புன்னகையும் பல அர்த்தங்களை சொல்லியது.

பார்தி தனது தொடக்கப் பள்ளிப் படிப்பை அரசுப் பள்ளியிலும், பின்னர் ஜார்க்கண்டில் உள்ள திலையா சைனிக் பள்ளியிலும் பயின்றார். பின்னர், அவர் புனேவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் பயின்றார், 1987 இல் இந்திய விமானப்படையின் (IAF) போர் சேர்ந்தார்.  அர்ப்பணிப்பான பணிக்காக, கடந்த 2008-ம் ஆண்டு குடியரசுத் தலைவரின் விமானப்படை பதக்கம் அவருக்கு வழங்கப்பட்டது. கடந்த 2023 இல் ஏர் மார்ஷலாக பதவி உயர்வு பெற்றார்.

2024ம் ஆண்டு அக்டோபரில் விமான நடவடிக்கைகளின் தலைமை இயக்குநராகப் பொறுப்பேற்றார். விமானப்படையின் தலைமையகத்தில் டி.ஜி.எம்..ஓ-வாகப் பொறுப்பேற்பதற்கு முன்பு, அவர் பிரயாக்ராஜில் உள்ள மத்திய விமானப் படைத் தளத்தில் மூத்த அதிகாரியாக பணியில் இருந்தார்.

இத்தகைய சிறப்புப் பெற்ற ஏ.கே.பார்தி, எளிய கிராமப்புற பின்னணியைக் கொண்டவர். பிகார் மாநிலம் பூர்னியா மாவட்டம் ஜுன்னி கலன் கிராமத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை ஜீவச்லால் யாதவ், மாநில நீர்ப்பாசனத் துறையில் கணக்காளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தாயார் ஊர்மிளா தேவி. இவர்களின் மூத்த மகன் ஏ.கே.பார்தி.

தந்தையைப் பொருத்தவரை ஏதாவது ஒரு அரசு வேலைக்குச் சென்றால் போதும் என்று விரும்பிய நிலையில், தாயார் கொடுத்த உற்சாகத்தில் விமானப்படையில் சேர்ந்தார்.  சிறுவயதில் தலைக்கும் மேல் பறந்த விமானத்தைப் பார்த்த ஏ.கே.பார்தியின் தாத்தா, நம்ம குடும்பத்தில் இருந்து ஒருத்தர் விமானத்தில் பறக்க வேண்டும் என்று கூறிய வார்த்தைகள் பார்தி மனதில் ஆழமாகப் பதிந்தன.

எப்போதும் எளிமையாக இருக்கும் பார்தி, எத்தகைய கடின சூழலையும் அலட்டிக்  கொள்ளாமல் அமைதியாக சமாளிப்பது அவரது தனித்துவம். இதற்கு சமீபத்திய உதாரணம்தான் ஆப்ரேஷன் சிந்தூர் குறித்த செய்தியாளர் சந்திப்பு என்கிறார்கள் அவரது நண்பர்கள்.  “பயங்கரவாதிகளுக்கு நமது ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது எங்க கிராமத்திற்கு மட்டுமல்ல தேசத்திற்கே பெருமை” என்று நெகிழ்கிறார் ஏ.கே.பார்தியின் தந்தை ஜீவச்லால் யாதவ்.

ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி, தன்னுடைய கிராமம், சுற்றியுள்ள கிராமங்களின் மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லி,  வழிகாட்டி, ஊக்கப்படுத்தும் பணிகளையும் சத்தமில்லாமல் செய்து வருகிறார். இதனால்  அடுத்த தலைமுறை சாதனையாளர்கள் நிறைய வருவார்கள் என்கிறார்கள் அப்பகுதியினர். ஏனென்றால் ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி. சராசரி குடும்பத்தில் பிறந்த ரியல் ஹீரோ.

Tags: ஆப்ரேஷன் சிந்துார்Air Marshal A.K. Bharti is a real hero that people celebrateஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி
ShareTweetSendShare
Previous Post

அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

Next Post

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

Related News

எதிர்கால போருக்கு இந்தியா ரெடி : வெகு ஜோராக நடக்கும் நவீன தளவாட உற்பத்தி!

”ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் தொடரும்” : யாரும் கட்டளையிட முடியாது – நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்!

கைவிட்ட சீனா அதிர்ச்சியில் பாகிஸ்தான் – கேள்விக்குறியான கராச்சி-பெஷாவர் திட்டம்?

ரஷ்யாவுக்கு ட்ரம்ப் ஆதரவு? : நேட்டோவை கை கழுவ திட்டம் – சிக்கலில் ஐரோப்பிய பாதுகாப்பு!

பிரதமர் பயணத்தால் ஒப்பந்தம் கையெழுத்து : மணிப்பூரில் முடிவுக்கு வருகிறது இனமோதல்!

தத்தளிக்கும் தொழில் நிறுவனங்கள் : மின் கட்டணத்தை குறைக்குமா தமிழக அரசு?

Load More

அண்மைச் செய்திகள்

பயிற்சியாளருக்கு குருதட்சணை : பாண்ட்யா சகோதரர்களின் கருணை உள்ளம்…!

அடிப்படை வசதி எங்கே? : துயில்கொள்ளும் மாநகராட்சி – தீராத துயரத்தில் பயணிகள்!

மந்த கதியில் பொருநை அரசு அருங்காட்சியக பணிகள் : துரித நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை!

டெண்டரில் மோசடி – தமிழக அரசுக்கு ரூ.90 கோடி இழப்பு!

தஞ்சை : பெட்ரோல் குண்டு வீசி பேரூராட்சி தலைவரை கொல்ல முயற்சி!

வேதனையில் வாடும் விவசாயிகள் : உழவர் சந்தைகளுக்கு வெளியே சட்டவிரோதமாக செயல்படும் கடைகள்!

வர்த்தக பிரச்னைகளில் அமெரிக்க தரப்புடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம் : வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்

இந்திய உறவை சீனாவிடம் இழந்து விட்டோம் : அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

பாமக நிர்வாகியை கொலை செய்ய முயற்சி : குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

அனுமதியின்றி தனது பாடல்கள் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் பயன்பாடு : உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies