துருக்கிய பல்கலைக்கழகங்களுடனான தனது ஒப்பந்தங்களை மும்பை ஐஐடி முறித்துக் கொண்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் பதிவில், துருக்கி சம்பந்தப்பட்ட தற்போதைய புவிசார் அரசியல் சூழ்நிலை காரணமாக, மறு அறிவிப்பு வரும் வரை துருக்கிய பல்கலைக்கழகங்களுடனான ஒப்பந்தங்களை நிறுத்தி வைப்பதாக மும்பை ஐஐடி தெரிவித்துள்ளது.
முன்னதாக துருக்கியில் உள்ள இனோனு பல்கலைக்கழகத்துடனான ஒப்பந்தங்களை டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் முறித்துக் கொண்டது.
பாகிஸ்தானுக்குத் துருக்கி ஆதரவு அளித்ததற்கு இந்திய மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துவருகிறது.