அனைத்துக் கட்சி தூதுக்குழுவில் இடம்பெற்றதில் அரசியல் இருப்பதாக தான் பார்க்கவில்லை என சசிதரூர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர், நம்மைப் பற்றி உலக நாடுகள் என்ன கூறுகின்றன என்பது பற்றி நாம் அனைவரின் பங்கும் இருக்க வேண்டும் எனவும், ஆகையால் தான் இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டேன் எனவும் தெரிவித்தார்.
மேலும், தூதுக்குழுவைத் தான் தலைமை தாங்கி செல்வது குறித்து காங்கிரஸ் ஏதேனும் நினைத்தால் அதைக் காங்கிரஸ் தலைவர்களிடம்தான் கேட்க வேண்டும் எனவும் சசிதரூர் கூறினார்.