ஆப்ரேஷன் சிந்துார் நடவடிக்கைகளைத் தொடர்ந்து மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் காப்பியடித்து வருவது வெட்டவெளிச்சமாகி உள்ளது.
ஆப்ரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் முகாம்களை துல்லியமாக அழித்த இந்திய ராணுவத்தைப் பாராட்டும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி, எல்லைக்குச் சென்று ராணுவ வீரர்களைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
அதுபோலவே, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பும், தனது ராணுவ வீரர்களைச் சந்தித்தார். தற்போது, பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து உலக நாடுகளுக்கு விளக்கும் வகையில், அனைத்துக் கட்சி குழுக்களை அனுப்புவதாக, மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், பாகிஸ்தானும் சிறப்புக் குழுவை அனுப்ப உள்ளதாக, ஷெபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் மக்கள் கட்சித் தலைவரான பிலாவல் பூட்டோ தலைமையிலான குழு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்ல உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக துாதரக உறவை துண்டிப்பது உள்ளிட்ட பிரதமர் மோடியின் அறிவிப்புகளையும், தமது நடவடிக்கையாகப் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டதை, பலரும் விமர்சித்து வருகின்றனர்.