‘ஆவேஷம்’ படத்தில் ‘குட்டி’ என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் மிதுட்டி, தனக்கும், தனது மனைவிக்கும் இடையேயான வயது வித்தியாசம் குறித்த விமர்சனத்துக்குப் பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், எங்களுக்குள் 9 வயது வித்தியாசம் இருந்த போதும், ஒருபோதும் அது பிரச்சினையாகத் தோன்றியதில்லை எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், மற்றவர்களின் விமர்சனத்துக்கு தாங்கள் ஏன் பதிலளிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.