ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி 14 ஆண்டுகளுக்குப் பின் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு வருகை தந்தார்.
வைர நெக்லஸ், உடலையொட்டிய படி அமைக்கப்பட்ட கவுன் ஆகியவற்றை அணிந்து கொண்டு தமக்கே உரிய பாணியில் அவர் சிவப்பு கம்பளத்தில் நடந்தார்.
இந்த ஆண்டு நடைபெறும் கேன்ஸ் விழாவில் இளம் நடிகர்களுக்கு சிறப்பு விருதான ட்ராபி சோப்பர்ட் விருதை வழங்கும் கிராண்ட் மதராக ஏஞ்சலினா ஜோலி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.