சேவாபாரதி இந்து சமய பண்பாட்டு வகுப்புகள் சார்பில் நடைபெற்ற பேரணியில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
சேவாபாரதி சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் கோடைக்கால இந்து சமய பண்பாட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் மாணவர்களுக்கு இந்துமதம், அதன் பண்பாடு, தெய்வபக்தி, தேசபக்தி குறித்து எடுத்துரைக்கப்படுகிறது.
இந்நிலையில் இதன் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு இந்து சமய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.