தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கார் மோதிய விபத்தில் சாலையோரம் நின்றிருந்த முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சண்முகசுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த லோகேந்திரன் என்பவர் தேனி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மது போதையில் காரை ஓட்டி சென்றுள்ளார்.
ஜக்கம்பட்டி ஆஞ்சநேயர் கோயில் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நின்று கொண்டிருந்த 72 வயதான முதியவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில், படுகாயமடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், லோகேந்திரனை கைது செய்தனர்.