ஜனநாயகத்தின் மூன்று தூண்களும் ஒன்றுக்கொன்று பரஸ்பரம் மதித்துச் செயல்பட வேண்டுமென உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக அண்மையில் பதவியேற்ற பி.ஆர்.கவாய்க்கு மும்பையில் பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய அவர், ஜனநாயகத்தின் மூன்று தூண்களான நீதித்துறை, அரசு, நாடாளுமன்றம் ஆகியவை சமமானது என்றும், ஒருவரை ஒருவர் மதித்து நடக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
இறுதியில், அரசமைப்புச் சட்டமே உயர்வானது என்றும் அவர் தெரிவித்தார். ஜனநாயகத்தின் மூன்று தூண்களும் அரசமைப்புச் சட்டத்தின்படி செயல்பட வேண்டும் எனவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேட்டுக்கொண்டார்.