பெங்களூருவில் கொட்டி தீர்த்த கனமழையால் பல்வேறு முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. பெங்களூரு சாந்தி நகரில் பேருந்து நிலையத்தில் மழைநீர் தேங்கியுள்ளதால் நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகளை வெளியே எடுக்க முடியாமல் ஓட்டுநர்கள் தவித்தனர்.
பெங்களூருவில் தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
மேலும், பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. டானரி சாலையில் உள்ள என்.சி.காலனி மற்றும் ஹோரமாவு பகுதியில் உள்ள சாய் லேஅவுட் ஆகிய பகுதிகளில் வீடுகளைச் சூழ்ந்துள்ள தண்ணீரை வெளியேற்றும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.