அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பாம் ஸ்பிரிங்ஸ் நகரில் உள்ள கருத்தரிப்பு மையம் அருகே நிகழ்ந்த வெடிகுண்டு விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
இதில் படுகாயமடைந்த 4 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கார் பார்க்கிங் அருகே வெடிகுண்டு வெடித்துச் சிதறியதில் பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாக எஃப்பிஐ தெரிவித்துள்ளது.
இதனிடையே, குண்டு வெடிப்பில் உயிரிழந்த நபர் தான், இந்த தாக்குதலுக்குக் காரணமாக நபராக இருக்குமோ? என்று சந்தேகிக்கப்படும் நிலையில், போலீசார் அதனை மறுத்துள்ளனர். மேலும், வேறு பகுதிகளில் எங்காவது வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதா என்றும் சோதனை நடத்தினர்.