நிலவில் அணுமின் நிலையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ரஷ்யாவும், சீனாவும் கையெழுத்திட்டுள்ளன.
இதுகுறித்து ரஷ்ய விண்வெளி ஆய்வு மையமான ராஸ்காஸ்மாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், வரும் 2035-ம் ஆண்டுக்குள் நிலவில் அணுமின் நிலையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், சீன விண்வெளி ஆய்வு அமைப்பான சிஎன்எஸ்ஏவுக்கும், ராஸ்காஸ்மாஸுக்கும் இடையே கையொப்பமாகியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக நிலவில் முற்றிலும் தானியங்கி முறையில் இயங்கும் அணுமின் நிலையம் அமைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.