கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே பாலம் திறக்கப்படுவதற்கு முன்பே அதன் இணைப்புச் சாலை உள்வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மொகலார் கிராமத்தையும், ஆலூர் கிராமத்தையும் இணைக்கும் வகையில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தற்போது பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டிய நிலையில், மழையின் காரணமாகப் பாலத்தின் இணைப்புச் சாலை உள்வாங்கியது.
பாலம் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பே இணைப்பு சாலை உள்வாங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.