தெற்கு காஷ்மீரில் பதுங்கியிருந்த இரு பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டனர்.
சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக அளிக்கப்பட்ட உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து, அந்த மாவட்டம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், அங்குள்ள டி.கே.போரா பகுதியில் பாதுகாப்புப் படையினரும், போலீசாரும் நடத்திய தீவிர சோதனையில் இரு பயங்கரவாதிகள் பிடிபட்டனர்.
அவர்களிடம் இருந்து 2 துப்பாக்கிகள், 4 வெடி குண்டுகள் மற்றும் 43 துப்பாக்கி தோட்டாக்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இருவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.