ஆந்திர மாநிலம் விஜயநகரம் அருகே காரில் விளையாடி கொண்டிருந்தபோது கதவு உள்பக்கமாகப் பூட்டிக் கொண்டதால் 4 சிறுவர், சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
துவாரபூடி கிராமத்தைச் சேர்ந்த உதய், சாருமதி, சரிஷ்மா, மனஸ்வி ஆகிய நான்கு சிறுவர், சிறுமியர், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தனர்.
நீண்டநேரம் ஆகியும் அவர்கள் திரும்பி வராததால் பெற்றோர்கள் தேடி பார்த்தனர். அப்போது மகளிர் மன்ற அலுவலகம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் 4 பேரும் மயங்கிக் கிடந்தது தெரியவந்தது.
உடனடியாக, கார் கண்ணாடியை உடைத்து 4 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் 4 சிறார்களும் ஏற்கனவே உயிரிழந்ததாகத் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.