முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசுக்கு அனுமதி அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மழைக்காலம் தொடங்கும் முன்பே முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிடக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.
இந்த மனு மீதான விசாரணையில் அணையைப் பராமரிக்க ஏதுவாக மரங்களை வெட்டுவதற்கான சுற்றுச்சூழல் அனுமதியை மத்திய அரசு 4 வாரத்தில் வழங்க வேண்டுமென உச்சநீதிமன்றம் ஆணையிட்டது.
இந்த பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள பணியாளர்கள் செல்ல ஏதுவாக தமிழக அரசின் 2வது படகைக் கேரள அரசே அனுமதிக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டது.
இதேபோல் வள்ளக்கடவு சாலையை சுற்றுச்சூழல் பாதிக்காதவாறு உரியப் பொருட்களைக் கொண்டு கேரள அரசே செப்பனிட வேண்டுமென்றும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டது.
மேலும் எஞ்சிய பிரச்சனைகள் குறித்து முடிவு செய்ய முல்லைப்பெரியாறு அணை மேற்பார்வை குழுவை உடனடியாக கூட்டி 4 வாரத்தில் முடிவுகள் எடுக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.