நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததால் 5 லட்ச ரூபாய் அபராதம் செலுத்த வேண்டுமென தொழில்துறை முதன்மை செயலாளருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது.
திருச்சி அருகே மணல் குவாரி உரிமத்தில் ஏற்பட்ட குளறுபடியில், உரிமம் பெற்றவர்களுக்கு நிவாரணம் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.
15 ஆண்டுகள் கடந்தும் நிவாரணம் வழங்காததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதன் விசாரணையின்போது, நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக, மனுதாரர்களுக்கு 20 லட்ச ரூபாய் வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நிவாரண நிதிக்கு 5 லட்ச ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் தொழில்துறை முதன்மைச் செயலாளருக்கு நீதிபதிகள் ஆணையிட்டனர்.