மலேசியா சிலம்ப போட்டியில் பதக்கம் வென்று திரும்பிய வீரர்களுக்கு சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது.
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற சிலம்ப போட்டியில் சென்னை காரப்பாக்கத்தை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் 15 தங்கம், 17 வெள்ளி, 25 வெண்கலம் என 57 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.
இந்நிலையில், பதக்கம் வென்று அசத்திய வீரர்களுக்கு பாராட்டு விழா சென்னை OMR சாலையில் உள்ள காரப்பாக்கத்தில் நடைப்பெற்றது. அப்போது வீரர்களுக்கு சால்வை மற்றும் மாலை அணிவித்து உற்சாகப்படுத்தினர்.