திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்கச் சென்ற பெண் பக்தர்கள் காத்திருப்பு அறையில் கட்டிப் புரண்டு சண்டையிட்ட சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாராயணகிரி காத்திருப்பு மண்டபத்தில் காத்திருந்த இரு பெண் பக்தர்களிடையே ஏற்பட்ட சிறு வாக்குவாதம் மோதலாக வெடித்தது.
இதனால் ஆத்திரமடைந்த இருவரும் ஒருவரை ஒருவர் தலைமுடியைப் பிடித்து இழுத்துக் கட்டிப்புரண்டு சண்டையிட்டனர்.
அவர்களின் குடும்பத்தார் வெகு நேரம் போராடி இருவரையும் சமாதானப்படுத்தினர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.