சேலம் மேட்டூர் அணையின் நீர்வரத்து 9 ஆயிரத்து 683 கன அடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 6 ஆயிரத்து 233 கன அடியில் இருந்து 9 ஆயிரத்து 683 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 109.33 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 77.46 டிஎம்சி ஆகவும் உள்ளது.
அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்துள்ள நிலையில், குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
நீர் திறப்பு குறைவாகவும், நீர்வரத்து அதிகமாகவும் உள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மளமளவென உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.