துணைநிலை ஆளுநர் மீது எந்தவொரு அதிருப்தியும் இல்லை எனப் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் அல்லாத படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு நடப்பாண்டிலேயே செயல்படுத்தப்படும் என்றும், இதுதொடர்பாக துணைநிலை ஆளுநரிடம் ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்தார்.