சாம்சங் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் முன்னிலையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன் தலைமையில் சாம்சங் நிறுவனம் மற்றும் தொழிற்சங்கம் தரப்பில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேசப்பட்டது.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.வெ.கணேசன், சாம்சங் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பிரச்சனை தொடர்பாக முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.
மேலும் பணி நீக்கம் செய்யப்பட்ட 25 தொழிலாளர்களையும் மீண்டும் பணியில் அமர்த்துவது குறித்து தொழிலாளர் நலத்துறை முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து பேசிய சிஐடியு மாநிலத் தலைவர் சௌந்தரராஜன், ஊதிய உயர்வு பிரச்சனை இந்த ஒப்பந்தத்தின் மூலம் முடிவுக்கு வந்துவிட்டதாகத் தெரிவித்தார்.
மேலும் ‘பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் சேர்ப்பது தொழிற்சங்கத்தின் பொறுப்பு என்றும் அவர் தெரிவித்தார்.