உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியதன்படி நியோ மேக்ஸ் முதலீட்டாளர்களின் ஆலோசனைக் கூட்டம் விரைவில் நடத்தப்பட வேண்டும் என மதுரை மாவட்ட வருவாய் அலுவலரிடம் நியோ மேக்ஸ் முதலீட்டாளர்கள் மனு அளித்துள்ளனர்.
கடந்த 14-ம் தேதி இந்த உத்தரவுக்கான நகல் கிடைத்ததாகவும், இதையடுத்து 14 மாவட்ட பதிவாளர்களுக்கும் நகல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் வருவாய்த் துறை அதிகாரிகள் கூறியதாக நியோ மேக்ஸ் முதலீட்டாளர் வழக்கறிஞர் ரஜினி தெரிவித்தார்.