கோவில்பட்டியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கக் கட்டாயப்படுத்திய மருத்துவரைப் பணி நீக்கம் செய்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்யத் தமிழ்நாடு அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் இளையரசனேந்தலைச் சேர்ந்த ராணுவ வீரர் கருப்பசாமியின் மனைவி ஜெயா 2018ல் தீக்காயமுற்று கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அரசு மருத்துவராக பணிபுரிந்த பிரபாகரன் தனக்குச் சொந்தமான மருத்துவ கிளினிக்கில் அப்பெண்ணுக்கு சிகிச்சையளித்த நிலையில் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக அவரது கணவரும், ராணுவ வீரருமான கருப்பச்சாமி மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தார். இந்த புகாரை விசாரித்த மனித உரிமை ஆணையம், அரசு மருத்துவர் பிரபாகரனை உடனடியாக பணி நீக்கம் செய்ய உத்தரவிட்டது.
மேலும், அரசு மருத்துவர் பிரபாகரனிடம் வசூலிக்கப்படும் அபராத தொகை 40 லட்சத்துடன் சேர்த்து 50 லட்சம் ரூபாயாக உயிரிழந்த ஜெயாவின் குடும்பத்திற்கு வழங்கத் தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் ஆணையிட்டது.