பரனூர் சுங்கச்சாவடி அருகே மதுபோதையில் லாரியை திருடிச்சென்று விபத்து ஏற்படுத்திய நபரைப் பொதுமக்கள் உதவியுடன் போலீசார் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், பரனூர் சுங்கச்சாவடி அருகே சாலையோரம் கனரக லாரியை நிறுத்திவிட்டு, பாஸ்ட் டிராக் மையத்தில் புதுப்பிப்பு செய்வதற்காக ஓட்டுநர் சென்றுள்ளார்.
அப்போது, அங்கு மதுபோதையில் இருந்த நபர், கனரக லாரியை திருடி சென்றுள்ளார். இது குறித்து ஓட்டுநர் அளித்த தகவலின் பேரில் போக்குவரத்து காவலர்கள் லாரியை விரட்டி சென்று பிடிக்க முயன்றுள்ளனர். போக்குவரத்து பணியில் இருந்த சிறப்பு ஆய்வாளர் பாலமுருகன், கனரக லாரியில் தொங்கியபடி லாரியை நிறுத்த முயற்சித்துள்ளார்.
போலீசாரைக் கண்டதும் அதிவேகமாகச் சென்ற மர்மநபர், மலைமலைநகர் அருகே சாலையின் தடுப்புச் சுவர் மீது லாரியை மோதி நிறுத்தியுள்ளார்.
உடனடியாக, பொதுமக்கள் உதவியுடன் லாரியில் இருந்த நபரை போலீசார் பிடித்து விசாரணைக்காகக் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.