நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து மோதி கட்டட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரத்தை சேர்ந்த இசக்கிமுத்து என்பவர் நெல்லையில் கட்டட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
வழக்கம்போல தூத்துக்குடியிலிருந்து பாளையங்கோட்டை பேருந்து நிலையம் வந்த அவர், அங்குள்ள கடையில் தேநீர் அருந்தியுள்ளார்.
பின்னர், பேருந்துகள் செல்லும் வழியாகச் சென்றபோது அவர் மீது தனியார் பேருந்து மோதியுள்ளது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த வந்த போலீசார், சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தனியார் பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.