பாகிஸ்தான் மற்றும் துருக்கி ட்ரோன்களை செயலிழக்கச் செய்த இந்திய தயாரிப்பான டி-4 கருவிக்கு அமெரிக்காவைச் சேர்ந்த போர் நிபுணர் ஜான் ஸ்பென்சர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
எதிரி நாட்டு ட்ரோன்களை முடக்கிச் செயலிழக்கச் செய்வதற்காக டி-4 என்ற கருவியை DRDO உருவாக்கியது. இந்த கருவி, எலக்ட்ரானிக் ஜாமர்கள், மற்றும் ட்ரோன்களை கண்டுபிடித்து செயலிழக்க வைக்கும் திறன் கொண்டது.
இந்த டி-4 கருவியை ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் ராணுவம் பயன்படுத்தியது. பாகிஸ்தான் மற்றும் துருக்கியின் சிறிய ரக ட்ரோன்களை, இந்த கருவி செயலிழக்கச் செய்தது.
இந்நிலையில், டி-4 கருவியைப் பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ள அமெரிக்கப் போர் நிபுணரான ஜான் ஸ்பென்சர், இதுபோன்ற குறைந்த செலவில் உருவாக்கப்பட்ட ட்ரோன் தடுப்பு கருவி, அமெரிக்காவின் தெற்கு எல்லை பாதுகாப்புக்குத் தேவை எனவும் குறிப்பிட்டுள்ளார்.