தெலுங்கானா ஆளுநர் மாளிகையில் ஆவணங்கள் மற்றும் ஹார்ட் டிஸ்க் திருடு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 14ம் தேதி வளாகத்தில் ஆவணங்கள் சிதறிக் கிடந்ததைக் கண்டு அதிகாரிகள் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அப்போது, ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர், உள்ளே நுழைந்து ஆவணங்கள், சில ஹார்ட் டிஸ்குகளை எடுத்துச் செல்வது தெரிந்தது.
இதையடுத்து, மாளிகை அதிகாரிகள் தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
தீவிர விசாரணை நடத்திய போலீசார், கணினி என்ஜினியர் சீனிவாஸ் என்பவரை கைது செய்துள்ளனர்.